உ.பி.யில் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கிய இந்து யுவா வாகினி அமைப்பினர்உ.பி.யில் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கிய ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பினர் இதற்க்கு போலீசார் துணையாக செயல் பட்டனர் என்பது அதிர்ச்சியை அளிக்கிறது

உத்தபிரதேச மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின்இந்து  யுவா வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள் மீரட் மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்து, நெருக்கமாக இருந்த இஸ்லாமிய ஜோடியை அடித்து வெளியே இழுத்து வந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்து யுவா வாகினி அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடியை போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்து யுவா வாகினி அமைப்பினரால் தாக்கப்பட்டவர் வாசிம் என தெரியவந்து உள்ளது. ஆனால் ஜோடியை யாரும் தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் மக்கள் மற்றும் இந்து யுவா வாகினி அமைப்பினர் வீட்டிற்குள் நெருக்கமாக இருந்த ஜோடியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என உள்ளூர் போலீஸ் அதிகாரி அலோக் பிரியதர்ஷி கூறிஉள்ளார். இஸ்லாமிய ஜோடி பின்னர் விடுவிக்கப்பட்டது என்றும் போலீஸ் தெரிவித்து உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.