அலிகார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாட்டிறைச்சி கிடைக்க குழு அமைத்தார் துணை வேந்தர்உத்தரபிரதேச மாநிலத்தில் பிரபலமான கல்வி நிறுவனமாகும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம். இப்பலக்லைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடங்கலின்றி மாட்டிறைச்சி கிடைக்க துணை வேந்தர் குழுவொன்றை அமைத்துள்ளார்.

துணை வேந்தர் தளபதி சாமர் உத்தின் ஷா தற்போது அம்மாநிலத்தில் மூடப்பட்டு வரும் அனுமதி பெறாத இறைச்சி கடைகளால் மாட்டிறைச்சி கிடைப்பதில் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்தின் பல்வேறு விடுதிகளில் தங்கியுள்ள 20,000 மாணவர்களில் சிலர் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து துணை வேந்தர் ஒரு குழுவினை அமைத்தார். ஐந்து பேர் அடங்கிய இக்குழு உரிமம் பெற்ற கடைகளில் இருந்து தடையின்றி மாட்டிறைச்சியை மாணவர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். இத்தகவலை கல்வி நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒமர் பீர்சாதா தெரிவித்தார்.

“நீண்ட நாட்களுக்கு மாணவர்களால் மாட்டிறைச்சியை உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களிடையே கொந்தளிப்பு ஏற்படலாம். ஏனெனில் மாட்டிறைச்சி புரதம் அதிகமுள்ள உணவாகும். அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரைவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நான் நம்புகிறேன்” என்றார் துணை வேந்தர்.

இதனிடையே இறைச்சி வெட்டும் கூடங்கள் அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளன. வெட்டுக்கூடங்களுக்கு மாடுகளை அழைத்து வரும் வண்டிகள் தொடர்ந்து தாக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால் இறைச்சி வருகை மிகவும் குறைந்து வருகிறது. ஏற்றுமதிக்காக கொண்டு வரப்படும் இறைச்சியின் வருகையும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அலிகார் மட்டுமின்றி அருகாமை மாவட்டங்களிலும் நிலைமை சீரடைய சில காலம் ஆகலாம் என்கிறார் புதிதாக துவங்கப்பட்டுள்ள அலிகார் இறைச்சி விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலர் தாரிக் அன்வர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.