துபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏலம்!துபையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீஸாரால் முடக்கப்பட்ட கார்களை அதன் தண்டனை காலம் முடிந்தும் அதன் உரிமையாளர்களால் மீட்கப்படாதவை மொத்தம் 645 போலீஸார் வசம் உள்ளன. இந்தக் கார்களில் விலைமதிப்புமிக்க 13 ரேஞ்ச் ரோவர், 3 போர்சே, 1 அல்பா ரோமியோ உட்பட சில மெர்ஸிடஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், மின் கூப்பர், ஜாகுவர் போன்றவைகளும் அடக்கம்.

முடக்கப்பட்டுள்ள 645 கார்கள் குறித்த விபரங்களை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிய நாளிதழ்களிலும் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் துபை போலீஸாரின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் உடனடியாக பர்துபை அல்லது தேராவிலுள்ள போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய கார்களை மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மீட்க முடியாமல் போனதற்கான தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மேற்சொன்னவாறு செயல்படத் தவறுபவர்களின் கார்களை எதிர்வரும் மே 25 ஆம் தேதி பகிரங்க ஏலம் மூலம் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தை துபையில் செயல்படும் ஏல மையங்கள் மூலமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சகோதரர்கள் யாருடைய வாகனமாவது பட்டியலிடப்பட்டிருந்தால் உடனே அதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவும்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.