வாகனத்தில் போராட்டக்காரர் கட்டிவைத்த சம்பவம் தொடர்பாக : ராணுவம் மீது வழக்குப்பதிவுகாஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்குக் கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பல வாக்குச்சாவடி களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். பாது காப்புப் படையினர் மீது தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டனர். கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர்.

இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை ராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்து, கல்வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகப் ராணுவ வீரர்கள் பயன்படுத்திய தாக வீடியோ ஒன்று அண்மையில்  வெளியானது. இது சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியது. ராணுவத்தின் இந்த செயலுக்கு  காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

முதல் மந்திரி மெகபூபா முப்தியும் அறிக்கை கேட்டு இருந்தார். இதற்கிடையில், ராணுவம் மீது ஜம்மு காஷ்மீர் போலீசார் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்)  பதிவு  செய்துள்ளனர்.கடத்தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.