முத்துப்பேட்டையில் பரபரப்பு: வங்கியில் பணம் எடுக்க வந்தவரை துப்பாக்கியால் சுடுவேன் என வங்கி செக்யூரிட்டி மிரட்டல்முத்துப்பேட்டையில் வங்கிக்கணக்கில்  பணமெடுக்க வந்த திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்த வங்கி பாதுகாவலரால்  பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்தவர் இன்பராஜ்(எ)இன்பா. இவர் திமுக பகுத்தறிவு இலக்கிய அணியின் நகர செயலாளராக உள்ளார்.  நேற்று இன்பராஜ்  ஸ்டேட் பாங்க் கிளைக்கு பணமெடுக்க சென்றார். மூக்கு கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்றதால் அவரால் வங்கி சலானை நிரப்ப முடியாமல்  தடுமாறினார். இதனையடுத்து அருகேயிருந்த வங்கி செக்யூரிட்டி தமிழ்வாணனிடம் சலானை நிரப்பிதர உதவி கேட்டார். ஆனால், செக்யூரிட்டி மறுப்பு தெரிவித்ததோடு அவரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து வங்கி மேலாளரிடன் இன்பராஜ்  விபரம் தெரிவித்தும் மேலாளர் தரப்பில் கண்டுகொள்ளவில்லை.

இதனால்  இன்பராஜ் வங்கியை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வங்கி செக்யூரிட்டி வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பீதியடைந்த இன்பராஜ் கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானோர் கூடினர். பின்னர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில்  தெரிவித்து புகார் மனு அளித்தார். இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்எஸ்ஐ மகேந்திர பூபதி தலைமையில் போலீசார் இது  குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திமுக பிரமுகர் வங்கி செக்யூரிட்டியால் மிரட்டபட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.