ஒரிசாவில் மதக்கலவரம்: பாஜக காவி தீவிரவாதிகள் வெறியாட்டம்ஒரிசாவில் பாஜக காவிகள் ராமர்   சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்தால் முஸ்லீகள் அதிகமாக வாழும்  பத்கர் நகரில் பயங்கர மதக்கலவரம் பதற்றம்....

ராமர் - சீதை குறித்து சமூக வலைத்தளத்தில் ஆட்சேபணக்குரிய கருத்து வெளியானதை அடுத்து, ஒரிஸா மாநிலத்தின் பத்கர் நகரில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

கலவரம் மற்றும் வன்முறையில் மனித உயிர் களுக்கு எந்த சேதமும் இல்லை

ஆனால், பல இடங்களில் கொள்ளையடிப்பு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

அமைதியை ஏற்படுத்த, பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து,
காவல் துறைத் தலைவர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோர் நகரில்முகாமிட்டுள்ளனர்.

சில இடங்களில் கொள்ளையடிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வந்துள்ள நிலையில், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

மதக்கலவரம் கலவரத்தைத் தொடர்ந்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கண்காணி்ப்பாளர் திலிப் குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளிகள் அடுத்த புதன்கிழை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந் நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரும் 15 மற்றம் 16-ஆம் தேதிகளில் புனவேஸ்வரில் நடைபெற உள்ளது. அதில், 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கான செயல் திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பத்ரக்கில் நடைபெற்றுள்ள மதக்கலவரம், மாநிலத்தில் மத உணர்வை மேலும் தூண்டிவிடக்கூடும். அதனால், வாக்காளர்களிடையே ஒரு பிளவு ஏற்பட்டு, அது பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு ஆதரவாக முடியும் என்று கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

ஒரிஸாவில் மதக்கலவரம் நடைபெறுவது மிகவும் அரிதான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. பத்ரக் நகரைப் பொருத்தவரை, முஸ்லிம் சமுதாயம் கணிசமாக உள்ள ஒரிஸா நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.