முத்துப்பேட்டை அருகே தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்முத்துப்பேட்டை அருகே தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு ஊராட்சி பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அடிபம்புகள், ஆழ்குழாய் அமைத்தும் குடிநீர் கிடைக்காத நிலையில் தனியார் வாகனங்களில் விற்பனைக்கு வரும் குடிநீரை இப்பகுதியினர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் வழங்காததையும் கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும் நேற்று கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன், மாதர் சங்க செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிதாக கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பயனுக்கு வராத குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீரை தட்டுப்பாடின்றி தினமும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் திட்ட பணிகளில் குளறுபடி செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாட்டில் உள்ள குடிநீர் கிணறுகளை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, வருவாய் ஆய்வாளர் தங்கதுரை, முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்–இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை–திருத்துறைப்பூண்டிசாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.