அதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜாஹிர். உணவக மேஸ்திரி. இவர் ஆர்டரின் பேரில் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி, அஞ்சு கறி, மந்தி, கப்சா உள்ளிட்ட உணவு வகைகளை சுத்தமாகவும், சுவையாகவும் தயார்செய்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், புதுத்தெரு என்கேஎஸ் சவுண்ட் சர்வீஸ் அருகே புதிதாக 'ஹயாத் ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் உணவகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி உள்ளார். திறப்பு நாளான இன்று அதிரை பிரமுகர்கள் பலர் உணவகத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து உணவக உரிமையாளர் மேஸ்திரி ஜாஹிர் கூறுகையில்...
அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அரபு உணவு வகைகளாகிய மந்தி, கப்ஸா, அதிரையின் பிரசித்திபெற்ற பிரியாணி, அஞ்சுகறி ஆகிய உணவு வகைகள் தயாரித்து வழங்கும் உணவங்கள் மிகக்குறைவு. இவற்றை போக்கும் வகையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் குறிப்பாக வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பிரியாணி, அஞ்சு கறி சோறு, கப்ஸா, மந்தி, ஃப்ரை ரைஸ், புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் தயார் செய்து கொடுக்க உள்ளோம். தினந்தோறும் புரோட்டோ, சப்பாத்தி, இடியப்பம், இட்லி, தோசை, கறி, சிக்கன் உள்ளிட்டவை சுவையாகவும், சுத்தமாகவும் சுடச் சுட தயார் செய்து வழங்க உள்ளோம். டீ, காபி உண்டு. எங்களது உணவகத்தில் தயார் செய்யப்படும் எந்தவொரு உணவிலும் 'அஜினோமோட்டோ' என்ற உணவு சுவையூட்டி சேர்ப்பது இல்லை. அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

உணவக தொடர்புக்கு:
9952132598
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.