அதிரையில் கூடை,கூடையாக குவியும் வெள்ளரிப் பழங்கள் (படங்கள்)



தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை அதிராம்பட்டினம் கடைவீதிக்கு வெயிலுக்கு இதமான வெள்ளரிப் பழங்கள் கூடை, கூடையாக விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.

இந்தப் பழங்கள் பக்கத்திலுள்ள மங்கனங்காடு கிராமத்திலிருந்து அதிரை கடைத்தெருவுக்கு  கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பழம் ரூ.20-க்கும், பெரிய பழம் ரூ.30-க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து வெள்ளரிப்பழ சாகுபடியாளரும், விற்பனையாளருமான மங்கனங்காடு சுப்பிரமணியன் கூறியது:
'எனது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 1 ஏக்கர் நிலத்தில் வெள்ளரிப்பழங்களை சாகுபடி செய்கிறேன். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதிக்கு வழக்கம் போல் வெள்ளரிப் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். தினமும் 150 பழங்கள் வரை விற்பனையாகிறது.

சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 3 மாதங்கள் மட்டுமே விளையக் கூடிய வெள்ளரிப் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. வெயிலுக்கு இதம் தரும் இந்த பழங்கள் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடலாம். குறிப்பாக உடல் பருமனை குறைக்க உதவும்.

3 மாதங்கள் மட்டுமே இந்த பழங்கள் கிடைக்கும் என்பதால், இப்பழத்துக்கு எப்போதும் கிராக்கி அதிகம். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அம்மை, வியர்க்குரு, வியர்வை கொப்பளங்கள் போன்றவற்றை தடுக்கும் வல்லமை கொண்டது.

வெள்ளரிப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெள்ளரிப்பழச்சாறு குடித்தால் தாகம் தணியும். இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் அதிரை பகுதியில்  பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.







Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.