காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடத்தப்பட்ட இளைஞன் கலீல் மஸ்பி, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தில் நேற்று (10) மாலை கடத்தப்பட்ட இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரசேத்தைச் சேர்ந்த கலீல் மஸ்பி (வயது 28) எனும் இளைஞர் இனம்தெரியாத சிலரினால் நேற்று (10) திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது சகோதரருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறித்த இளைஞரை தேடி வந்த அவரது சகோரர்கள் மற்றும் நண்பர்கள், இளைஞன் காங்கேயனோடை பிரசேத்திலுள்ள ஈரான் சிட்டி கிராமத்திலுள்ள வயல் ஒன்றிலிருந்து மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த இளைஞனின் சகோதரர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் காயமடைந்துள்ள இந்த இளைஞன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தார்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாணைகளை நடத்தி வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.