ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மட்டும் தான் இந்தியர்களா? - ப.சிதம்பரம் தாக்குதென்னிந்தியர்கள் குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்திருந்த பா.ஜ.க தலைவர் தருன் விஜய்க்கு பதிலடி தரும் விதமாக, ‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மட்டும் தான் இந்தியரா?’ என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் என கூறப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் பா.ஜனதா தலைவர் தருண் விஜய் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது தென்னிந்தியர்கள் குறித்து அவர் தரக்குறைவாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தருண் விஜய் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலத்த எதிர்ப்பு வெளியான நிலையில், தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ,” நாங்கள் தென்னிந்தியர்களுடன் ஒன்றாக வசிக்கிறோம் என தருன் விஜய் கூறியுள்ளார். இதில் அவர் ‘நாங்கள்’ என்று யாரை சொல்கின்றார்?. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் தான் இந்தியர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.