மட்டன் வறுவல் செய்வதுஎப்படி?என்னென்ன தேவை?

மட்டன் - 700 கிராம்
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
பட்டை  - 1
அன்னாசி பூ - 1
பிரியாணி இலை - 1
கிராம்பு - 1
கல்பாசி - 2
பெருஞ்சீரகம் - 1/8 தேக்கரண்டி
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சிவப்பு மிளகாய் தூள் - 1½ தேக்கரண்டி
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - ¼ கப்
உப்பு - ½ தேக்கரண்டி

அரைக்க...

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது
சின்னவெங்காயம் - 5


எப்படிச் செய்வது?

ஜாரில் பெருஞ்சீரகம், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு குக்கரில் மட்டன் எடுத்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, அன்னாசி பூ, கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, பெருஞ்சீரகம் சேர்த்து பின் வெட்டி வைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து 7 முதல் 8 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் வெட்டி வைத்த தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வேக விடவும். இப்போது வேக வைத்த மட்டனை சேர்த்து அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு கலந்து வேக வைத்த மட்டன் தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும். அவை நன்கு சுருண்டு வரும் வரை வேக விடவும். மட்டன் வறுவல் ரெடி!!!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.