பட்டுக்கோட்டையில் எச். ராஜாவை கண்டித்து பத்திரிகையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ( படங்கள் ) தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டனம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டிணம், சேதுபவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்திற்கு அதன் மாவட்ட தலைவர் இ.மா.ராஜா தலைமை தாங்கினார், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் சிவா, பழனிவேல் , பட்டுக்கோட்டை நகர தலைவர் முருகதாஸ், பேராவூரணி நகர தலைவர் கான்முகம்மது, செயலாளர் ஜகுபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து எல்லா இடங்களிலும் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி தரக்குறையவான வார்த்தைகளையும் பதிவு செய்யும் எச் ராஜா மீது பாரதிய ஜனதா கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.