போரால் பாதிக்கப்பட்ட ஏமனியர்களுக்கு இந்தியாவில் சிகிச்சை ! ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி ஷியா தீவிரவாதிகளுக்கு எதிராகவும், ஏமன் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப் படைகள் போராடி வருகின்றன. இந்த போரின் நடுவே சிக்கி பல ஏமனியர்கள் உயிர் உடைமைகளுடன் உடல் உறுப்புக்களையும் இழந்து வருகின்றனர்.

இந்நிலையில், போரால் பாதிப்படைந்த சுமார் 54 பேர்கள் மற்றும் அவர்களுக்கு  துணையாக செல்வோருக்கான முழுச்செலவை ஏற்று இந்தியாவில் சிகிச்சையளிக்க அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அமீரக செம்பிறைச் சங்கம் செய்து வருகிறது.

அமீரகம் இதுவரை ஏமன் மக்களின் உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 2 பில்லியன் டாலர்கள் அளவுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

Source: Emirates 247

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.