முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சாக்கடை நீர் கலந்த குடிநீருடன் வந்த இளைஞர்களால் பெரும் பரபரப்பு !முத்துப்பேட்டை பெரியக்கடைதெரு, மரைக்காயர் தெரு, சின்னக்கட்சி மரைக்காயர் தெரு, தெற்குதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த ஒரு மாதகாலமாக குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருகிறது இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சேக்பரீத் தலைமையில் நேற்று காலை சாக்கடை நீர் கலந்த குடிநீருடன் திரண்டு பேரூராட்சிக்கு வந்தனர். பின்னர் செயல்அலுவலர் உமாக்காந்தனை சந்தித்த இளைஞர்கள் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது அவர் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சிலதினங்களில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார் இதனையடுத்து அங்கிருந்து இளைஞர்கள் வெளியேறி சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Thanks சேக்பரீத்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.