முத்துப்பேட்டை பகுதியில் குடிநீரில் சாக்கடைநீர் கலப்பு கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழயாயில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அதனை குடிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த வாரம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால் 5 தினங்கள் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து மறுநாள் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

அன்றையிலிருந்து பல பகுதிக்கு குடிநீர் குழாயில் சாக்கடைநீர் கலந்து வருவதால் ஒருவகை தூர்நாற்றம் வீசி தண்ணீரை மக்கள் குடிக்க முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கபட்டதையடுத்து பேரூராட்சி சார்பில் குடிநீர் குழாயில் சாக்கடைநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பாதுக்காப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து ஒருவாரமாக முத்துப்பேட்டை சின்னக்கட்சி மரைக்காயர் தெரு மற்றும் ஹாஜா சந்து, ஆற்றாங்கரை சந்து, நெய்னா பள்ளி சந்து, மரைக்காயர் தெரு   ஆகிய தெருக்களில் வரும் குடிநீரிலும் சாக்கடைநீர் கலந்து வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி சார்பில் அப்பகுதியை பரிசோதித்து இதுநாள்வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி திமுக நிர்வாகி முஸ்தாக் அகமது தலைமையில் சிலர் சாக்கடைநீர் கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அணைத்து குடிநீர் இணைப்பையும் பரிசோதனை செய்து வருவதாகவும் உடன் பார்வையிட்டு சரி செய்யப்படும் என்று செயல் அலுவலர் உமாகாந்தன் தெரிவித்ததையடுத்து வந்திருந்தவர்கள் அங்கிருந்து சென்றனர். கடந்த சில தினங்களாக 10க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டு தெருக்குதெரு குடிநீர் குழாயை சோதனை செய்து வருகிறோம். இதில் பொதுமக்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால்  கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறோம் விரைவில் கண்டுபிடித்து சரி செய்யப்படும் என்று பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.