முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை



முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதி நகரில் முக்கிய பகுதியாகும். இந்த பேருந்து நிலையம் மூன்று முக்கிய சாலைகள் பிரியும் மையத்தில் அமைந்துள்ளது. இதில் ஒருபுறம்  மன்னார்குடி, கும்பகோணம் பகுதிகளுக்கும், மறுபுறம் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், காரைக்கால், பாண்டிச்சேரி, வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கும், மற்றொருபுறம் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அதிராம்பட்டினம், ராமநாதபுரம், தொண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தற்போது மூன்று சாலைகளுமே ஆக்கிரமிப்புகள் பெருகி சாலைகள் சுருங்கிவிட்டது. இதனால் இரு பேருந்துகள் செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, தொடக்க கல்வி அலுவலகம், அரசு பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள் உள்ளதால், வாகனம் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படமால் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் முடிவு
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயகுமார் கூறுகையில், முத்துப்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிமிப்புகள் விரைவில் அகற்றபடும். முன்னதாக ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அளவீடு செய்ய வேண்டும். இதற்கு பேரூராட்சி ஒத்துழைப்பு தரவேண்டும். விரைவில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக உறுதியான முடிவெடுக்கபடும் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.