துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் ! படங்கள் இணைப்பு துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் 22.04.2017 சனிக்கிழமை துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள அல் அப்ரா கிளினிக்கில் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் நஜிமா நசீர் தலைமையில் குழுவினர் இந்த இலவச பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் கீழை ஹமீது யாசின், துணைப் பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் சர்புதீன் உள்ளிட்டோர் மருத்துவ முகாமுக்கு வருபவர்களை பதிவு செய்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.