அதிரையில் கணக்கெடுப்பு நடத்தும் மர்ம நபர்கள்? எச்சரிக்கை!அதிரையில் சமிப காலமாக சிலர் வீடுவீடாக சென்று டெங்கு பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அவர்களிடம் இருந்த உத்தரவு நகலை வாங்கி படித்து பார்த்துள்ளனர். அப்போது அது காலாவதியானது என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பணியாளர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் சொல்ல வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் இதுபோன்ற கணக்கெடுப்பு என்று கூறி வீடுகளுக்கு வரும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.