கடும் வறட்சியால் தமிழகத்தில் நெல் சாகுபடி வீழ்ச்சி: அரிசி விலை பன்மடங்கு உயர வாய்ப்புதஞ்சாவூர்: தமிழகத்தில் நிலவும் வறட்சியால் அரிசி விலை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர். பருவமழை பொய்த்து போனதால் ஏறபட்ட வறட்சியின் காரணமாக தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், பன்ருட்டி, திருவன்னைநல்லூர் உள்ளிடட இடங்களில் நெற்பயிர்கள் கருகி விளைச்சல் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது.

இதனால் ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்வதால் செலவினங்கள் அதிகரித்து 75 கிலோ அரிசி மூட்டை ஒன்றின் விலை ரூ.500 வரை விலை அதிரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரிசி ஆலையில் நெல் அவியலுக்கு தேவைப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதால் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் அரிசி விலை கிலாவுக்கு ரூ.25 வரை அதிகரிக்குமெனவும் அரிசி ஆலை உரிமைாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.