கேரளா-விலே ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டு சிறுவன் உயிரிழப்பு !கோழிக்கோடு: ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கப்பாட் பகுதியைச் சேர்ந்த பஷீர் பாலோடயில் மற்றும் சுஹ்ரபி ஆகியோரின் மகன் முகமது யூசுஃப்அலி, கடந்த புதன்கிழமை நல்லாலம் இடத்துக்கு தனது தாய், பாட்டி, சகோதரியுடன் சென்றுள்ளார். பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக ஜெல்லி மிட்டாயை வாங்கி சாப்பிட்ட சிறுவன் பிடிக்கவில்லை என்றதும் அதனை வாங்கி சுவை பார்த்த அவரது தாயார் மிட்டாயை தூக்கி வீசியுள்ளார்.

மிட்டாயை சாப்பிட்ட பின் வீடு திரும்பிய சிறுவன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றபோது சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மிட்டாய் சாப்பிட்ட சிறுவனின் தாய் மயக்கமடைந்ததையடுத்து அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு காவல் துறையினர் மிட்டாயை தடை செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த மிட்டாயை பறிமுதல் செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.