வீட்டுப்பணிப் பெண்ணின் திருமணச் செலவினை ஏற்று நடத்தி வைத்த சவூதி எஜமானி !செங்கடல் நகரான ஜித்தா மாநகரில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத சவுதி எஜமானி ஒருவர் தன் வீட்டுப்பணிப் பெண்ணுக்கு அவரது முழு திருமணச் செலவையும் ஏற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இத்திருமணத்தில் அப்பெண்ணின் உறவினர்களையும், நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்ததுடன் தன்னுடைய தோழிகள், குடும்பத்தினரையும் கலந்து கொள்ளச் செய்து அசத்தியுள்ளார்.

இத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறும் போது, சவுதியர்களின் உண்மையான நேசம் இது தான், அவர்கள் உதவுவதற்கு நாடுகளையோ நிறங்களையோ மதங்களையோ பார்ப்பதில்லை ஆனால் ஓரு சிலர் இழைக்கும் அநீதிகளை மட்டும் போட்டு போட்டுக்கொண்டு பரப்பி சவுதியர்கள் மீது தவறான எண்ணம் நிலவச்செய்கின்றனர் என ஆதங்கப்பட்டார்.

இதே பணிப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதும் மிகுந்த அக்கரையுடன் அவரை கவனித்துக் கொண்டதுடன் சிறப்பு மருத்துவர்களை கொண்டும் அவருக்கு உயரிய சிகிச்சைகளை கிடைக்கச் செய்ததுடன் தேவையேற்படின் தொடர்ந்து சிகிச்சையளிக்கவும் உறுதியளித்துள்ளதாகவும் இன்னொரு தோழி தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.