பாபர் மசூதியை நான்தான் இடிக்க சொன்னேன்... மாஜி எம்.பி. ஓப்பன் டாக்.!பாபர் மசூதியை நான்தான் இடிக்க  சொன்னேன் என்று அதிரடியாக மாஜி எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டது நான்தான் என்று முன்னாள் எம்பி, ராம்விலாஸ் வேதாந்தி
தெரிவித்துள்ளார். தற்போது இது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மசூதி அருகிலிருந்து அதை இடிக்க அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஜயராஜே சிந்தியா ஆகியோர் உத்தரவிட்டதாக வெளியான தகவல் தவறு.

பரபரப்பான அந்த தருணத்தில் மைக்கை தன்னிடம் இருந்து பறித்து கர சேவகர்களை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அத்வானி உள்ளிட்டோர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர். ஆனால் பாபர் மசூதியை இடிக்க சொன்னது நான்தான் என்று தெரிவித்துள்ளார்.

மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோரை மீண்டும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.