ராம்தேவின் பதஞ்சலிக்கு இந்தியா ராணுவம் அப்புபதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸ்’உண்ணுவதற்கு ஏற்றது இல்லை.. இராணுவ கேன்டீன்களில் தடை..!

இராணுவத்திற்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD) பதஞ்சலி நிறுவனத்தின் ஆம்லா ஜூஸ் ஆய்வக சோதனையில் தோல்வி அடைந்ததால் உன்னுவதற்கு ஏற்றது இல்லை என்று இராணுவ கடைகளில் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இது பிற நிறுவனங்களின் குளிர்பானங்கள் போன்றது இல்லை, இது சத்துப் பானம், மனித நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கூறினர்.

சோதனை முடிவு
பாதுகாப்பு அமைச்சகத்தின் வட்டாரங்கள் பதஞ்சலியின் ஆம்லா ஜூஸினை மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பொதுச் சுகாதார ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பியதாகவும் அதில் இது தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறுகின்றன.


விளக்கம் கேட்டு நோட்டிஸ்
எனவே விதிகளைப் பின்பற்றி உடனடியாகக் கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD) குறிப்பிட்ட பாணத்தை உடனடியாக விற்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விளக்கம் கேட்டு நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


ஆம்லா ஜூஸ்
நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் விளக்கத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஆம்லா ஜூஸின் குறியீடு எண் 85417 என்றும், பேட்ச் எண் GH1502 என்றும் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டான்டர்டு இதற்குப் பொருந்தாது
பதஞ்சலி நிறுவனம் ஆம்லா ஜூஸ் ஆயூர்வேத மருந்து என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றிச் சோதைக்கு உட்படுத்திய பிறகு தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியது. இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்டான்டர்டு ஆணையத்தின் நெறிமுறைகள் இதற்குப் பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.


மேலும் சோதனை
கேன்டின் ஸ்டோர்ஸ் டிப்பார்ட்மெண்ட்(CSD)வெவ்வேறு கேண்டின்களில் இருந்து பெறப்பட்ட ஆம்லா ஜூஸினை சோதனை செய்ய அரசு இயக்கி வரும் பிற சோதனை மையங்களுக்கும் அனுப்பியுள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.