அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு அனுப்பும் பணத்திற்கு வாட் வரியால் பின்விளைவுகள் ஏற்படலாம் என அச்சம் !சுமார் 7.8 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரியும் அமீரகத்திலிருந்து பிற நாடுகளுக்கு அதிகளவு பணம் அனுப்புவதில் உலகின் 6 வது பெரிய நாடாக திகழ்கிறது, அதாவது வருடத்திற்கு 19 பில்லியன் டாலர் (70 பில்லியன் திர்ஹத்திற்கு) ஈடான பணம் குடும்பத் தேவைகளுக்காக அனுப்பப்படுகிறதாம்.

இந்நிலையில், அனுப்பும் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப சுமார் 5 சதவிகித அடிப்படை வாட் வரி விதிக்கப்பட்டால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, பிலிப்பைன்ஸ், ஏமன், இந்தோனேஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள் மீது மிகுந்த சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு அன்னியச் செலாவணி வருவாயை ஈட்டித்தரும் உலகின் முதல் 5 பெரிய நாடுகள் பற்றிய விபரம்.

1. அமெரிக்கா (யு.எஸ்) 56.3 பில்லியன் டாலர்
2. சவுதி அரேபியா  36.9 பில்லியன் டாலர்
3. ரஷ்யா            32.6 பில்லியன் டாலர்
4. சுவிட்சர்லாந்து  24.7 பில்லியன் டாலர்
5. ஜெர்மனி          20.8 பில்லியன் டாலர்

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.