திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, ஏரிகள் தூர்வார வேண்டும்திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரிகளை தூர்வார வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.   இதில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு, சேதுராமன்: மாவட்டத்தில் உள்ள  23  ஆறுகளும் நீரில்லாமல் கடந்த 4 மாதங்களாக வறண்ட நிலையில் உள்ளன. எனவே  தென்மேற்கு பருவமழைக்கு  முன்பாக  ஆறுகள் மற்றும்  ஏரிகள், குளம்,  குட்டைகளை தூர்வார வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது  குளங்களின் உள்ளே கூட கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளன. எனவே அதனை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசிலாமணி: வறட்சி நிவாரணம் வழங்குவதில்  மிகப்பெரிய குளறுபடிகள் இருப்பதால் அதனை சரிசெய்ய வேண்டும்.

கடந்தாண்டிற்கான இன்சூரன்ஸ் தொகை  வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள  ஆறுகளில் மிகப்பெரிய அளவில் மணல் மற்றும் வண்டல் மண்கள் கொள்ளை நடைபெற்று  வருவதால் அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டும். சுந்தரமூர்த்தி:  விவசாயிகளுக்கு வழங்கப்படும் வறட்சி நிவாரணமானது அவர்களின் பழைய  கடன்களுக்கு வரவு வைக்கப்படும் நிலை உள்ளதால் அதனை மாவட்ட நிர்வாகம் தடுக்க  வேண்டும். குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும்  மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது  கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று   பொருட்களை வாங்க பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே மாலையில்  கூடுதல் நேரம் கடைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டத்தில்  பேசிய விவசாயிகள் பலரும் வறட்சி நிவாரணம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். ஆறுகள் மற்றும் குளம் குட்டைகளை தூர்வார வேண்டும் என்று  தெரிவித்தனர். நாகை,ஏப்.28: மீன்பிடி தடைக்காலம் என்பதால், 13வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.