சிரியாவில் விஷவாயு குண்டு வீசி பொதுமக்கள் படுகொலை விரிவான விபரங்கள் (படங்கள்)சிரியாவில் பஷார் அல் அசத் எனும் கொடுங்கோலனின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவனுக்கு துணையாக ரஷ்யாவும் ஈரானும் சிரியாவில் பல்வேறு அக்கிரமங்களை புரிந்து வருகிறது, அமெரிக்காவும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து பொதுமக்களை காப்பதாக கூறிக்கொண்டு தனது பங்கிற்கு சத்தமில்லாமல் பலரது ஆவிகளை பறித்து வருகிறது.

கிட்டதட்ட சுடுகாடாகவே போய்விட்ட சிரியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வெளியேறிவிட்டனர், எஞ்சியோர் புகலிடம் தருவோர் யாருமில்லாததால் சிரிய, ரஷ்யா, ஈரானிய கூட்டு ராணுவத்தினரால் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு வருகின்றனர்.

நேற்று (செவ்வாய்) இந்த ஷைத்தானிய கூட்டுப்படைகள் இட்லீப் மாகாணத்தின் கான் ஷெய்க்கவுன் எனும் ஊரின் மீதும் அதன் மருத்துவமனை மீதும் நடத்திய விஷவாயு குண்டுவீச்சால் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என சுமார் 72 பேருக்கு மேல் இதுவரை மரணமடைந்து விட்டனர், மேலும் பலர் உயிருக்குப் போராடி வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழமைபோல் பல ஐரோப்பிய நாடு தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவிட்டு அமைதியாகி விட்டன. அமெரிக்காவும் ரஷ்யாவும் தீவிரவாதத்திற்கு எதிராக இன்னும் கடுமையாக போராடப்போவதாக நகைச்சுவை அறிக்கையை வெளியிட்டுவிட்டு எஞ்சியிருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்க அலைந்து கொண்டுள்ளன. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் கொலைகார ரஷ்யா விஷவாயு குண்டையும் வீசிவிட்டு அது போராளிகளால்  வெடிக்கப்பட்டது என கதை கட்டுவது இன்னும் கொடுமை.

சிரியா மக்களின் அழிவையாவது மீடியாக்கள் வழியாக உலகம் ஓரளவு அறிந்து கொள்கிறது ஆனால் பர்மா, ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது ராணுவமும் பௌத்த தீவிரவாதிகளும் இணைந்து நிகழ்த்தி வரும் வன்முறையை பெயரளவுக்கு எடுத்துச் சொல்லக்கூட எந்த ஏடும் முன்வருவது இல்லை.

Source: Gulf News


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.