துபாய் வங்கியில் பேச முடியாத, காது கேளாத வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்!துபையில் செயல்படும் Emirates NBD வங்கி தனது வாய் பேசமுடியாத, காது கேளாத வாடிக்கையாளரின் வசதிக்காக புதிய சேவையை துவங்கியுள்ளது. பரீட்ச்சார்த்த முயற்சியாக ஜூமைரா டவர்ஸ் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் இந்த வருடத்திற்குள் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அடிப்படையில், அரேபிய சைகை மொழி மற்றும் அமெரிக்க சைகை மொழி ஆகியவற்றை உணர்ந்தும் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்நுட்பத்திற்கு 'KinTrans' என பெயரிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் சைகை மொழிகள் கணிணி வழியாக வங்கி ஊழியருக்கு பொருள் உணர்த்தப்படும், அதேபோல் வங்கி ஊழியரின் பதிலும் சைகை மொழியாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் திரை வழியாக வாடிக்கையாளருக்கு புரிய வைக்கப்படும். இத்தகைய தொழிற்நுட்பம் உலகிலேயே முதன்முறையாக துபையில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

துபையில் மாற்றுத் திறனாளி வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் தனது 9 கிளைகளில் இலகுவான அணுகல் வசதி (Mobility Access), தானியங்கி கதவு வசதி (Sliding Door), உயரம் குறைவான ஏடிஎம்கள் (Accessible low height ATM), செக் எழுத சிறப்பு கவுண்டர்கள் (Cheque writing counters), சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள் (Designated car parking spots), தொட்டு உணரக்கூடிய தரைவழி காட்டி (Tactile floor indicators), முன்னுரிமை கியூ வசதி (Priority Queuing), சிறப்பு காத்திருப்பு அறை (Separate waiting area) என சிறப்பு கூடுதல் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்த வருடம் ஆரம்பம் முதல் பார்வையற்றவர்களுக்காக (Visual disablities) சிறப்பு பிரெய்ல் கரன்சியையும் (Braille currency) அறிமுகப்படுத்தி உள்ளது.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.