துபாயில் சொகுசு காரில் ஓட்டுனர் பயிற்சி ! பெயிலானாலும் பிரச்சனையில்லை !!உங்களிடம் 30,000 திர்ஹம் இருக்கிறதா? ஆடம்பர வாகனத்தில் ஓட்டுனர் பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா? துபையில் அதற்கும் வழியுண்டு!

ஆடம்பர பிரியர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் 30,000 திர்ஹத்தை ஒருமுறை செலுத்தி நீங்கள் இணைந்துவிட்டால் இடையில் நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, இறுதியாக லைசென்ஸ் கிடைக்கும் வரை அத்தனை செலவுகளும் அதற்குள்ளே.

மேலும், வேறொரு வாகனத்தில் இலவசமாக பயிற்சிக்கு வந்து போக உங்களை பிக் அண்ட் டிரப் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆடம்பர பயிற்சிகளுக்காக ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்ஸிடிஸ் ஜி500 மாடல் கார்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு ஆடம்பர SUV கார்களுடன் விரைவில் ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்களும் (Luxury Sports Car) இத்திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன என துபை போக்குவரத்துத் துறையின் சார்பாக இயங்கும் எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட் (Emirates Driving Institute - EDI) தெரிவித்துள்ளது.


Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.