இந்திய உளவாளி என்று கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை! தீர்ப்புபாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததாகக் கைது செய்யப்பட்டிருந்த இந்தியருக்கு இன்று பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குல்பூஷன் ஜாதவ் என்னும் பெயருடைய இந்தியர் தமது நாட்டில் பெயரை மாற்றி  ஒற்றர் வேலை செய்து உளவறிந்தார் என்று குற்றம் சாட்டி அவரைக்  கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பலுசிஸ்தானில் வைத்துக் கைது செய்தனர்.

 குல்பூஷன் ஜாதவ் இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி ஆவார். ஆனாலும் அவர் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை இந்தியா வன்மையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் திகதி பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆயினும் இந்தத் தீர்ப்புக்கெதிராக இந்தியா கடுமையாகப் போராடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.