சவுதி அரேபியா ஷாப்பிங் மாலில் வெளிநாடு ஊழியர்களுக்கு இனி வேலை கிடையாது..அதிரடி அறிவிப்பு..!சவுதி அரேபியா ஷாப்பிங் மாலில் வெளிநாடு ஊழியர்களுக்கு இனி வேலை கிடையாது..அதிரடி அறிவிப்பு..!

 வியாழக்கிழமை சவுதி அரேபிய தொழிலாளர் துறை அமைச்சர் வெளியிட்ட உத்தரவில் ஷாப்பிங் மாலில் இனி சவுதி நாட்டவர்களுக்கு மட்டுமே வேலை அளிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய ஷாப்பிங் மால்களில் இப்போது 5 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே சவுதியை சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் இதனால் ரிடெயில் துறையில் அதிக வேலை வாய்ப்புகளைச் சவுதி நாட்டவர்கள் இழந்துள்ளதாகவும் அதனால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வேளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பைக் குறைக்கும் சவுதி
சவுதி அரசு நிதானமாக வேளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதைக் கவனமாகக் குறைத்து வருகின்றது. மக்கள் தொகையில் மூன்றாம் இடத்தில் உள்ள சவுதி இப்போது தங்கள் நாட்டவர்கள் வேலை வாய்ப்பை அதிக அளவில் இழந்து வருவதாகவும், அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடனும் செயல்பட்டு வருகின்றது.


டிவிட்டரில் உத்தரவு
சவுதி தொழிலாளர் அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கத்தில் ஷாப்பிங் மால் போன்ற வியாபார வணிகங்களில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் எத்தனை வேலை வாய்ப்புகள் பாதிப்புக்குள்ளானது என்ற எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

ரிடெய்ல் வேலை வாய்ப்பில் சவுதி அரேபியர்கள்
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட விஷன் 2030 பொருளாதாரச் சீர்திருத்த திட்டத்தின் அறிக்கைப் படி சவுதி ரிடெய்ல் துறையில் 1.5 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் அதில் 3,00,000 லட்சம் நபர்கள் மட்டுமே சவுதி நாட்டவர்கள் ஆகும்.

2020 வரை கெடு
எனவே ரிடெய்ல் துறையில் அதிக வேலை வாய்ப்புகளைத் தாய் நாட்டவர்களுக்கு உருவாக்கி 2020-ம் ஆண்டு இந்தத் துறையில் அதிகமானோர் சவுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

வேலையை இழக்கப் போகும் ஊழியர்கள்
சவுதியின் இந்த முடிவால் குறைந்தது 1.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதில் இந்தியாவில் இருந்து எவ்வளவு நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.