துளசியாபட்டினம்- திருத்துறைப்பூண்டிக்கு நாளை முதல் பேருந்து இயக்க முடிவுவேதாரண்யதாலுக்கா, துளசியாப்பட்டினத்திலிருந்து வாய்மேடு வழியாக திருத்துறைப்பூண்டிக்கு பேருந்து விடக்கோரி திமுகவினர;  நாளைதுளசியாபட்டினத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர் என தினகரனில் கடந்த 10ம் செய்தி வெளியானது. இதையொட்டி நடத்திய பேச்சுவார்த்தையில் அதிகாரிகளின் அனுமதி பெற்று பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து துளசியாபட்டினத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. . கடந்த இரண்டுஆண்டுகளுக்குமுன்பு அந்த பேருந்து நிறுத்தப்பட்டது உடனடியாகபேருந்துவிடவேண்டும் எனவலியுறுத்திநாளைஅண்ணாபேட்டை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்றுஅறிவித்திருந்தனர். இதையொட்டி நேற்றுவேதாரண்யம் தாலுகாஅலுவலகத்தில் தாசில்தார்  இளங்கோவன் தலைமையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

வேதாரண்யம் அரசுபோக்குவரத்துக்கழக மேலாளர் செந்தில் திருத்துறைப்பூண்டி மேலாளர் தென்னரசு, அண்ணாபேட்டைமுன்னாள் ஊராட்சிமன்றதலைவர் ரவிச்சந்திரன் துணைத்தலைவர் குமார், திமுக ஒன்றிய பொருளாளர் கமாலுதீன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.இதில் நாளை முதல் திருத்துறைப்பூண்டியிலிருந்து துளசியாப்பட்டினத்திற்கு காலை 8 மணிக்கு வரும் பேருந்தினை வாய்மேடு துணைமின்நிலையம் வரை நீட்டிப்பு செய்வது போக்குவரத்து துறைஅதிகாரிகள் அனுமதிபெற்று திருத்துறைப்பூண்டியிலிருந்து துளசியாபட்டினத்திற்குகாலை 8.40,காலை 10.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு மூன்றுமுறை இயக்க முடிவு செய்யப்பட்டது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.