கோரையாற்றுக்கரை தடுப்புசுவரை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கைதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீரை கொண்டுவந்து சேர்க்கும் கோரையாறு முழுவதும் பராமரிப்பின்றி தூர்ந்து கிடக்கிறது. நீரோட்டத்தை திசைமாற்றும் வகையில் வேலிகாட்டாமணக்கு மற்றும்  கருவேல மரங்களும் மண்டியுள்ளன.

இதனால் நீரோட்டம் தேங்கி திசைமாறி கரையரிப்புக்கும் உடைப்புக்கும் இச்செடிகளே காரணமாகி வருகின்றன. இந்நிலையில் ஆற்றுக்கரை உடைப்பை தடுத்து தவிர்க்கும் விதமாக பல இடங்களில் கடந்த காலங்களில் செங்கல் மற்றும் சிமென்ட் பிளாக்குகளால் சாய்தள தடுப்பு சுவர்கள் கட்டபட்டு பயனிலிருந்தன. மேலும் மழை வெள்ள நீரோட்டத்தினால் பாதிப்புக்குள்ளாகும் ஆற்றின் கரைவளைவுகளை கண்டறிந்து அவ்விடத்தில் தடுப்புசுவர்கள் கட்டப்பட்டன. இதனால் கரை உடைப்புகள் பெருமளவு தவிர்க்கப்பட்டன. ஆனால் தரமற்ற கட்டுமான பணிகளால் பயனுக்கு வந்த தடுப்பு சுவர்கள் பலவும் நீரில் அடித்து செல்லபட்டு விட்டன.  கோரையாற்றின் கிளை ஆறுகள், வடிகால்களில் பயனிலிருந்த தடுப்புசுவர்களும் காணாமலேயே போய்விட்டன.

வரும் காலங்களில்  எதிர்பாராத நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகையில் இந்த தடுப்புச்சுவர்களும் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இதனால் வெள்ளநீர் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.  எனவே புதிதாக தடுப்புசுவர்களை கட்டுவதோடு இடிபாடுகளுடன் உள்ளவற்றையும் பொதுப்பணித்துறையினர் சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.