அமீரகத்தில் வெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்தின் மீது சேவைக் கட்டணம் உயர்வு !அமீரகத்தில் பல வெளிநாட்டவர்களும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளோம் மேலும் இத்தகையவர்களில் அனேகமானோர் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் தொழிலாளர்களே, இவர்கள் மூலம் கணிசமான தொகை அன்னிய செலாவணி வருவாயாக சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

உயர்ந்து வரும் விலைவாசியை கருத்திற்கொண்டு அமீரகத்திலிருந்து எக்சேஞ்சுகள் வழியாக அனுப்பப்படும் பணத்திற்கான சேவைக்கட்டணத்தை சுமார் 7 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதாக அமீரகத்தில் செயல்படும் Foreign Exchange and Remittance Group (FERG)எனும் எக்ஸ்சேஞ்சுகள் கூட்டமைப்பின் பொருளாளர் ராஜிவ் பஞ்சோலியா அறிவித்துள்ளார் என்றாலும் இந்த சேவைக் கட்டண உயர்வு விஷயத்தில் ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சுகளும் தனிப்பட்ட வகையிலேயே முடிவு எடுத்து அறிவிக்குமே தவிர அது கூட்டமைப்பின் முடிவாக அறிவிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.(அரசின் மீதான பயம் காரணமாக இருக்கலாம்)

1000 திர்ஹம் மற்றும் அதற்கும் கீழ் அனுப்பப்படும் பணத்திற்கு இதுவரை 15 திர்ஹம் சேவைக்கட்டணம் செலுத்தி வந்த நிலையில் இனி 1 திர்ஹம் கூடுதல் சேர்த்து 16 திர்ஹங்களாக செலுத்த வேண்டும், அதுபோல் 1,000 திர்ஹத்திற்கு மேல் பணம் அனுப்புபவர்கள் இனி 20 திர்ஹத்திற்கு பதிலாக 22 திர்ஹம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேவேளை, யூஏஈ எக்ஸ்சேஞ்சின் தலைமை செயல்  அதிகாரி பிரமோத் மன்காட் குறிப்பிடும் போது, தொழிலாளர்களை அதிகம் பாதிக்காத வகையில் 1000 திர்ஹத்திற்கு கீழ் பணம் அனுப்புவோரிடமிருந்து சுமார் 7 சதவிகிதத்திற்குள்ளாகவே ஏற்றப்பட்ட சேவைக் கட்டணம வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். உலகளவில் சுமார் 7.5 சதவிகித சேவைக் கட்டணம் பெறப்படும் நிலையில் அமீரகத்தில் 2.5 சதவிகித அளவு தான் பெறப்படுவதாகவும் ஒப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு (அன்னியச் செலாவணி எனும்) பணம் அனுப்புவதில் 2016 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி அமீரகம் உலகின் 4வது பெரிய நாடாக விளங்குவதாகவும், ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் அளவுக்கு பிற நாடுகளுக்கு பணம் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.