பிளாஸ்டிக் முட்டை - இருக்கா, இல்லையா?: தேசிய முட்டை ஒருங்கிணைப்பு தலைவர் விளக்கம்இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை என்பதே இல்லை என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு தலைவர் விளக்கமளித்துள்ளார்.

 சீனாவில் இருந்து இந்தியாவிற்கு பிளாஸ்டிக் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று தேசிய முட்டை கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் சமீக காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்ற. குறிப்பாக சீனாவில் இருந்து மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் முட்டைகள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவல் முட்டைப் பிரியர்களை களக்கமடைய வைத்தது. குழந்தைகளுக்கு பெற்றோர் முட்டை கொடுக்கலாமா வேண்டாமா என யோசிக்கும் அளவுக்கு வதந்தி அனைவர் மனதிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.கே.பகத் இந்தியாவில் முட்டைகள் ஒரு போதும் இறக்குமதி செய்யப்படுவது கிடையாது என்று தெரிவித்துள்ளார். சீனாவில் 100 சதவீதம் பழுப்பு நிற முட்டைகளே உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் வெள்ளை நிற முட்டைகள் தான் உள்ளன என்று கூறியுள்ளார்.
லாபம் இல்லை

சாதாரண முட்டைகளை விட பிளாஸ்டிக் முட்டைகள் உற்பத்தி செய்வதற்கு அதிக செலவு ஆகும் என்றும் எனவே பிளாஸ்டிக் முட்டை உற்பத்தி செய்வோருக்கு பொருளாதார ரீதியாக லாபம்கிடைக்காது என்றும் பகத் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் முட்டை எப்படி இருக்கும்
தற்போது நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவுவதால் மஞ்சள் கருவில் உள்ள ஈரப்பதம் ஆவியாதல் மூலம் குறைவதாகவும், இந்த இயற்கை மாற்றத்தால் வரும் முட்டைகளை நாம் வேகவைக்கும் போது அதன் மஞ்சள் கரு சற்று கடினமானதாகவும், ரப்பர் போலவும் தோன்றும் என்றும் கூறியுள்ளார்.

வதந்தி
எனவே இந்த முட்டைகளை பிளாஸ்டிக் முட்டைகள் என சிலர் தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்டு அதிகாரி பகத், இனிமேலாவது இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்பதோடு யாரும் நேம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.