திப்பு சுல்தான் கால பீரங்கி கற்குண்டுகள் கிடைத்ததுதிருவண்ணாமலை, தோக்கவாடியை சேர்ந்த ஜோதி என்பவர் வாழைக்கன்று நட பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது சிறுசிறு கற்குண்டுகள் கிடைத்தன. இந்நிலையில் செங்கம் கருவூலகத்தில் இருந்த இந்த கற்குண்டுகளை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று மாநில அருங்காட்சியக இயக்குனர் ஜெகன்நாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, 134 கற்குண்டுகளை நேற்று வேலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இதுகுறித்து வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், ‘இந்த கற்குண்டுகள் 200 ஆண்டுகள் பழமையானவை. இவை கி.பி.18ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் காலத்தில் பீரங்கி குண்டுகளாக பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கற்குண்டும் 350 கிராம் எடை கொண்டுள்ளது’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.