நாகூரில் உளவுத்துறை போலீசாறும் பி.ஜே.பி.யினரும் கூட்டு சதி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது நாகூர் போலீசார் பொய் வழக்கு பதிவு!நேற்று முன்தினம் நாகூர் அலங்காரவாசலில் சில பிஜேபியினர் தர்காவிற்கு வந்த யாத்ரீகப்பெண்களிடம் சில்மிஷம் செய்தனர்.

அங்கு நின்றுக்கொண்டிருந்த சில முஸ்லீம் இளைஞர்கள் அதனை தட்டிக்கேட்டனர்.

அதற்கு நாங்கள் அப்டிதான் பண்ணுவோம் எங்கள் ஆட்சி நடைபெறுகிறது பொத்திட்டு போங்கடா என்று ஏகவசனத்தில் பேசியிருக்கின்றனர்.

இதைக்கேட்ட இளைஞர்கள் அருகில் உள்ள நாகூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க செல்ல அதனை காவல்துறை ஏற்காமல் அனுப்பி வைத்துவிட்டனர்.

இந்நிலையில் புகார் அளிக்க சென்ற இளைஞர்கள் நாகூர் உளவுத்துறை அதிகாரி விஸ்வா என்கிற விஸ்வலிங்கம் சந்தித்து இந்த பிரச்சினையை நிறுத்திக்கொள்ளுங்கள் புகார் அளிக்ககூடாது மீறி அளித்தால் உங்கள் மீது தீவிரவாத வழக்கு பதிந்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் 9 இளைஞர்கள் மீது கொலைமுயற்சி ஆள்கடத்தல் போன்ற 7 குற்றவழக்கை பதிந்து சிறைக்கு அனுப்பிவிட்டார்.

விஸ்வா என்ற உளவுத்துறை அதிகாரி நாகப்பட்டினம் பிஜேபி பிரமுகருடன் இணைந்து முஸ்லீம்கள் மீது காழ்ப்புணர்வுடன் நடந்துவருவது தொடர்கதையாக உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.