அதிரையில் பழ. கருப்பையாவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக வரவேற்பு ( படங்கள் )இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அனைத்து சமுதாயத்தவர் பங்கேற்கும் மாபெரும் மனித நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தனை பேச்சாளர் பழ. கருப்பையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம் அபூபக்கர் எம்.எல்.ஏ, தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜும்மா பள்ளி தலைமை இமாம் மவ்லவி அப்துல் ரஹ்மான் மன்பஈ, பாதிரியார் ஆ. அருளானந்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை அதிராம்பட்டினத்திற்கு வருகை தந்துள்ள பழ. கருப்பையாவுக்கு அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலர் வழக்கறிஞர் முனாப், பொருளாளர் சேக் அப்துல்லா,  மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, துணைச்செயலர் முஹம்மது அபூபக்கர், இ. வாப்பு மரைக்காயர் மற்றும் திமுக அதிரை பேரூர் துணைச்செயலாளர் தில்லை நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.