முத்துப்பேட்டையில் முழு கடையடைப்பு - பலத்த ஆதரவு ( படங்கள் ) காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும், விவசாயக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் 19 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது

இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது . முத்துப்பேட்டை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது

 பெரிய கடைத்தெரு   பழைய   பேருந்து நிலையம், புதிய  பேருந்து நிலையம் அசாத் நகர்  மண்ணை சாலை, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது  தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வந்தது   இந்த முழு அடைப்பு போராட்டம்  முழு வெற்றி அடைந்ததாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்  200 பேருக்கு மேல் போராட்ட காரர்கள் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.