நடந்தது எவ்வளவு தூரம்? துல்லியமாகச் சொல்லும் கருவி!இளைஞர்களைக் கவர்வதற்கென்றே எத்தனையோ விஷயங்கள் உள்ளன. நல்ல பாட்டு, இசை, திரைப்படம், சமூக வலைத்தளங்கள், உடை, மோட்டார் பைக், கார், புதிய புதிய உணவு வகைகள்... என ஒவ்வொரு நாளும் அவர்களுடைய கவனத்தை ஈர்க்க ஆயிரமாயிரம் விஷயங்கள்...

எனவே அவர்களுடைய உடல் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் ஏது?

பல வண்ணங்களில் - இளைஞர்களைக் கவரும் விதமாக - வாட்ச் வடிவில் வந்திருக்கிறது கையில் அணியும்  ஒரு பட்டை, FASTRACK REFLEX என்ற பெயரில். கையில் அணியும் இந்தப் பட்டையின் வேலை என்னவென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
இளைஞர்களின் உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்பட்டுவிட்டது? நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூரத்தைக் கடந்தார்கள்? அப்புறம் செல்போனில் வந்து அவர்களால் கவனிக்காமல் விடப்பட்ட அழைப்புகள், குறுஞ்செய்திகளைப் பற்றிய தகவல்கள் என எல்லாவற்றையும் கண்டுபிடித்துச் சொல்வதுதான் இந்தக் கருவியின் வேலை.

வேலைக்குப் போகும் இளைஞர்கள் லஞ்ச் டைமில் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு சிறிது கண்ணயரலாம் என்று நினைத்தால், அலாரம் வைத்துக் கொண்டு தூங்கலாம். எவ்வளவு நேரம் அவர்கள் தூங்கினார்கள் என்பதையும் இந்தக் கருவி சொல்லிவிடும்.
ஒரே ஒரு குறை:  இந்தப் பட்டையை அணிந்து கொண்டு தண்ணீரில் குதித்து நீந்தக் கூடாது. ஏனெனில் இது  தண்ணீரை கருவிக்குள் உள்ளே புகவிடாமல் நூற்றுக்கு நூறு தடுக்கும் ஆற்றல் கொண்டதல்ல.
பேட்டரியில் இயங்கும் இந்தக்  கருவியை லேப்டாப்பிலோ, கம்ப்யூட்டரிலோ கூட சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு தடவை முழு சார்ஜ் ஆகிவிட்டால், அப்புறம் 14 நாட்கள் அதைப் பற்றிக் கவலை இல்லாமல் இருக்கலாம்.
- ஜென்னி நிலா
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.