வேளாங்கண்ணி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்புவேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி இருப்பதாக விஏஓ குமரவேல் கொடுத்த தகவலின்பேரில், கீழையூர் கடற்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

 கரை ஒதுங்கி உள்ள சடலத்தின் உடல் முழுவதும் வெண் குஷ்டம் போல் உள்ளது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. கீழையூர் கடற்கரை காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெண் குஷ்ட நோய் முற்றியதால் அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா குறித்து, கீழையூர் கடற்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.