தஞ்சை மாவட்டத்தில் மீன், இறால் பண்ணை அமைக்க அரசு மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு !



தஞ்சை மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் புதிய மீன் பண்ணை குளங்கள் மற்றும் குட்டைகள் அமைக்க 50மூ மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்
அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக கீழ்க்கண்ட  திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

புதிய மீன்பண்ணை குளங்கள்/குட்டைகள் அமைத்தல்
ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7.00 இலட்சத்தில் 50 விழுக்காடு ரூ.3.50 இலட்சம் மானியத் தொகை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மீன் வளர்ப்பு குளங்கள்/தொட்டிகளை சீரமைத்தல்/புதுப்பித்தல்
ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3.50 இலட்சத்தில் 50 விழுக்காடு மானியம் ரூ.1.75 இலட்சம் வழங்கப்படும்.

நன்னீர் மீன் வளர்ப்பு இடுப்பொருள் செலவினம்
ஒரு ஹெக்டேர் மீன் வளர்ப்பிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.1.50 இலட்சத்தில் 50 விழுக்காடு மானியம் ரூ.0.75 இலட்சம் வழங்கப்படும்.

நன்னீர் மீன் வளர்ப்புக் குளங்களில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார்/காற்றுப்புகுத்தி மற்றும் விளக்குகள் அமைத்தல்
ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத் தொகை ரூ.15.00 இலட்சத்தில் 50 விழுக்காடு ரூ.7.50 இலட்சம் மானியத் தொகை வழங்கப்படும்.

மேற்படி திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள் 873/4, கீழவாசல் அண்ணா சாலை, தஞ்சாவூர், தொலைபேசி எண் 04362-235389 எனும் முகவரியில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும், தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள்/விவசாயிகள் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.