இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் கெளரவிப்பு ( படங்கள் )இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கழகம் சார்பில் 16 ஆம் ஆண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பெருவிழா சென்ற ஏப்-1, 2 ஆகிய தேதிகளில்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆர்டிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர் இரா. துரைக்கண்ணு,
தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் க. பாஸ்கரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன், முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எம் முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு 'அமீருல் மில்லத்' விருது வழங்கப்பட்டது.

இதில், அதிராம்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் மு. முகம்மது தாஹா அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும், அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர், தமிழ்அறிஞர் அதிரை அஹ்மத் மற்றும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை மை. பரீதா பேகம் ஆகியோருக்கு 'தமிழ் மாமணி' விருதும், அதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் அவர்களுக்கு தமிழ்மாமணி விருதுடன் வழுத்தூர் டாக்டர் எம்.ஜே.எம் இக்பால் அறக்கட்டளை சார்பில் ரூ. 10 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

மாநாட்டு கவியரங்கில் அதிராம்பட்டினம் கவிஞர் அ. சேக்அப்துல்லாஹ் அவர்கள் 'பெண்ணீயம்' என்ற தலைப்பில் எழுதி வாசித்த கவிதை தமிழ்அறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றன.

மாநாட்டில் மகளிர் அரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், பெண்ணிய அரங்கம் ஆகியவற்றில் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் தமிழ்நாட்டின் பலபகுதிகளிலிருந்தும், இலங்கையிலிருந்தும் அறிஞர்கள், கவிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். வாழ்நாள் சாதனையாளர், தமிழ்மாமணி, சேவைச்செம்மல் போன்ற விருதுகள் 100க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.