மன்னார்குடி திணரியது காவல்துறை நடுங்கியதுமன்னார்குடியில் கடந்த 11/04/17 அன்று இரவு சுமார் 11மணியளவில் காவி சங்கப்பரிவாரர்களின் தூண்டுதலின் பேரில் 15 ஆண்டுகளாக மாட்டு இறைச்சி பிரியாணி கடை நடத்தி வரும் நூர் முஹம்மது அவர்களை மன்னை நகர காவல் ஆய்வாளர் கழனியப்பன் மிகவும் கொடூரமான முறையில் தாக்கியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியும் அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி இருக்கின்றார். மேலும் பாதிக்கப்பட்டவரின் புகாரை ஏற்காமல் சிகிச்சை அளிக்க மறுத்த மன்னை அரசு மருத்துவமனை நிர்வாகத்தையும் வன்மையாக கண்டித்து மன்னை ஐக்கிய ஜமாத் P.F.I, T.M.M.K, S.D.P.I, M.M.K, S.D.T.U மற்றும் திராவிட விடுதலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இன்று  மன்னை காவல் நிலையம் முன் மாபெரும்  முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், SDPIகட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், SDPIகட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் விலாயத் உசேன், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஷேக்தாவூது மற்றும் PFI, SDPI மற்றும் SDTUவின் மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள் மற்றும்  ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

இவண்    SDPIகட்சி  திருவாரூர் மாவட்ட
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.