தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பி.சீதா ராமன் கடந்த மார்ச் 22-ந் தேதி ஓய்வு பெற்றார். இதனால் தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது. இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும் பணியில் தமிழக அரசு கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ்கான் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

அவர் இன்று காலை மாநில தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிய ஆணையாளராக பதவி ஏற்க உள்ளார்.. மாலிக் பெரோஸ்கான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகித்தவர். அரசுத்துறைகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அது தொடர்பான பணிகளில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் முழு பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்தை சார்ந்தது. உள்ளாட்சி தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே மாலிக் பெரோஸ்கான் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.