சவூதியில் கட்டாய மருத்துவ காப்பீடு திட்டம் அமல் !சவுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைவருக்குமான கட்டாய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நிறைவுற்று ஏப்ரல் 10 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக சவுதி சுகாதார காப்பீட்டு கவுன்சில் (The Council of Cooperative Health Insurance - CCHI) அறிவித்துள்ளது.

கடைசி மற்றும் 4 ஆம் கட்டமாக நடைபெற்ற ஓருங்கிணைந்த கட்டாய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்படி, 25 மற்றும் அதற்கும் குறைவான வெளிநாடு மற்றும் சவுதிய ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், அனைத்து ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். இதில் ஆண் குழந்தைகள் 25 வயது வரையும் பெண் குழந்தைகள் அவர்களுக்கு திருமணமாகும் வரை இச்சலுகையை பெற உரிமையுள்ளது. நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு செய்ய மறுப்பது தற்போது சட்டப்பூர்வ குற்றமாகவும்.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பமான இந்த ஒருங்கிணைந்த கட்டாய மருத்துவ காப்பீட்டுப் பணிகளில் முதற்கட்டமாக 100 மற்றும் அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்களும், இரண்டாம் கட்டமாக 50லிருந்து 99 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களும், மூன்றாம் கட்டமாக 25லிருந்து 49 ஊழியர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களும் இத்திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டனர்.

Source: Saudi Gazette
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.