டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ - கைது செய்வதாக மிரட்டிய டி.எஸ்.பி.பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கரை கைது செய்வதாக புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

நெல்லைமாவட்டம் கடையநல்லூர்-பண்பொழி சாலையில் தனியார் பள்ளி, மசூதி ஆகியவை அமைந்துள்ள பகுதியில் மாநில சாலையை ஒட்டிய பகுதியில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்தக்கடை அமைக்கும் போதே இதற்கு இந்தப்பகுதி வழியே வயல்களுக்கு,தோப்புக்களுக்கு செல்லும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அதற்கு செவிசாய்க்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக கடையநல்லூர்-பண்பொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்.

உடனடியாக தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையின் சாவியை கேட்டனர். அனால் அவர் கொடுக்க மறுத்து விடவே புளியங்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கடையநல்லூர் எம்எல்ஏ அபூபக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் புளியங்குடி காவல்துறை
துணைக்கண்காணிப்பாளர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர் சாவியை கொடுக்கவில்லை என்றால் கைது செய்யவேண்டியது வரும் என்று கூறினார். தைரியமிருந்தால் கைது செய் . தமிழ்நாட்டில் என்ன நடக்குன்னு பார்க்கலாம் என்று எம்எல்ஏ அபூபக்கர் கூறினார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட முயன்றனர். பின்னர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தாமாகவே கலைந்தது சென்றனர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்போடு பணியாளர்கள் டாஸ்மாக் கடையை திறந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.