அதிரையில் 'ஜல்கோபியா' சோற்றுக்கற்றாளை ஜூஸ் அறிமுகம் ( படங்கள் )தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர். இவர் கடைத்தெரு பகுதியில் 'ஜல்கோபியா ஜூஸ் கார்னர்' என்ற பெயரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கோடை வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் மருத்துவகுணம் வாய்ந்த சோற்றுக்கற்றாளை ஜூஸ் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து குலாம் தஸ்தகிர் கூறுகையில்;
சோற்றுக்கற்றாளை மருத்துவ குணம் வாய்ந்தது. அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கூடலிவயல், தம்பிக்கோட்டை, மறவாக்காடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை சீவி எடுத்துவிட்டு ஜெல்லி போல் இருக்கும் உட்பகுதியை எடுத்து மோருடன் மிக்சியில் அரைத்து அதில் ஜூஸ் தயார் செய்கிறேன். இவை உடலில் சத்தைக்கூட்டவும், சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. ஒரு ஜூஸின் விலை ரூ.20 தினமும் 100 ஜூஸ் வரை விற்பனையாகிறது. அதிகளவில் இளைஞர்கள் விரும்பி பருகுகின்றனர்' என்றார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.