முத்துப்பேட்டையில் குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை



குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று பேரூராட்சி அலுவலகத்–்தை முற்றுகையிட்ட பெண்கம் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கபட்டு வருகிறது. இதற்காக முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் பெரியக்கடைதெரு ஆகிய பகுதிகளில்2 மேல்நிலை குடிநீர் தேக்க  தொட்டிகள் உள்ளன.

இந்நிலையில் பெரியக்கடைதெரு, மரைக்காயர் தெரு, சின்னக்கட்சி மரைக்காயர் தெரு, தெற்குதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக  குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருகிறது. இதை உபயோகித்த குழந்தைகள் உட்பட பலர் உடல்நிலை பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கடந்த மாதம் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய  பெண்கள்   நேற்று  பேரூராட்சி அலுவலகம் திரண்டுவந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.