உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்தது மும்பை மருத்துவர்கள் சாதனைஉலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்ததாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்தார்.

உலகிலேயே குண்டு பெண்ணாக இருந்த எமான் அகமதுவின் உடல் எடை பாதியாக குறைந்ததாகவும், சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்தார்.

குண்டு பெண்
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது(வயது36). இவர் தனது 11 வயதில் பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். மேலும் யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் மிகவும் குண்டானார்.

சுமார் 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எமான் அகமதுவின் உடல் எடை 490 கிலோவாக அதிகரித்தது. இதன் காரணமாக எமான் அகமது உலகிலேயே அதிக எடைகொண்ட குண்டு பெண்ணாக கருதப்பட்டு வந்தார். இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

மும்பை மருத்துவமனை
இதனை தொடர்ந்து மும்பை சர்னி ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அவரது உடல் எடையை குறைக்க சிகிச்சை அளிக்க முன்வந்தது. இதற்காக ரூ.2 கோடி செலவில் அந்த மருத்துவமனையில் தனி அறை அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 11–ந்தேதி எமான் அகமது பிரத்யேக விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் எடை குறைப்பிற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது எமான் அகமதுவிற்கு அளித்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது எமான் அகமதுவின் உடல் எடை 242 கிலோவாக குறைந்து உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் முப்பாஷால் தெரிவித்து உள்ளார்.

பாதியாக குறைப்பு
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ‘எமானுக்கு அளித்து வந்த லேப்ரோஸ்கோபிக் சிகிச்சையில் அவரது வயிற்று பகுதியில் தேங்கி இருந்த கொழுப்பு, கரைசலாக மாற்றி வெளியேற்றப்பட்டது. கடந்த மாதம் 29–ந்தேதி 340 கிலோ எடை இருந்தார். தற்போது அவர் 242 கிலோ எடை உள்ளார். நல்ல முன்னேற்றம் இருந்து வரும் நிலையில் அவருக்கு தொடர்ந்து எடை குறைப்பிற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே வேளையில் அவரின் சிறுநீரகம், இருதயம், நுரையீரல், போன்ற உறுப்புகளும் நன்றாக செயல்படுகிறதா? என்பதையும் நாங்கள் கவனமுடன் பார்த்து வருகிறோம்’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.